எஃப் 1 ரீமேக்கில் அஜித்: நரேன் கார்த்திகேயன் விருப்பம்
சென்னை: சினிமா மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டின் கொண்டாட்டமாக செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை, தி.நகரில் உள்ள ஏஜிஎஸ் சினிமாஸில் ஆர்.யூ.சி ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல் நடந்தது. இந்த இரண்டு நாட்களிலும் ஸ்போர்ட்ஸ் பின்னணியில் உருவான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிகழ்வு ரைஸ் அப் சாம்பியன்ஷிப் ஃபவுண்டேஷனின் (ஆர்.யூ.சி) முதல் நிகழ்ச்சியாகும். எஃப் 1 (ஃபார்முலா 1) கார் ரேஸ் சாம்பியன் நரேன் கார்த்திகேயன் இந்த நிகழ்வை தொடங்கி வைத்தார். பிறகு நிருபர்கள் அவரிடம் எஃப் 1 ஹாலிவுட் படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடியுமா என கேட்டனர். ஏன் முடியாது.
கண்டிப்பாக செய்யலாம். எஃப் 1 போட்டிகளில் இந்தியர்கள் சாதிக்கும் தூரமும் தொலைவில் இல்லை. அப்படி எஃப் 1 படத்தை ரீமேக் செய்தால் அதில் அஜித்தான் பொருத்தமான நடிகராக இருப்பார்’’ என்றார் நரேன் கார்த்திகேயன். பிராட் பீட் நடித்த எஃப் 1 ஸ்போர்ட்ஸ் படம், உலக அளவில் பெரும் வசூல் சாதனை செய்த படமாகும். நடிகை பிந்து மாதவி, ஆர்.யூ.சி நிறுவனர் செல்வகுமார் பாலு, நடிகர், தயாரிப்பாளர் மற்றும் ஆர்.யூ.சி. வீரபாபு வேலாயுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.