அஜித்தை மீண்டும் இயக்காத முருகதாஸ்
கடந்த மே மாதம் நடந்த அஜித் குமாரின் பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ‘சிறுத்தை’ சிவா, ஆதிக் ரவிச்சந்திரன் போன்றோர் கொடுத்த போஸ் வைரலானது. இதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டியில், ‘அஜித் குமார் பிறந்தநாள் மற்றும் அவரது கார் ரேஸ் அணி வெற்றிக்கான கொண்டாட்டத்தில் எடுத்த போட்டோ இது. எனக்கு ‘தீனா’ என்ற படத்தின் மூலம் முதல் வாய்ப்பு வழங்கியவர் அஜித் குமார். அதன் மூலமாக ஆமிர் கானுடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
எனது வேகமான வளர்ச்சி அஜித் குமாரால் மட்டுமே நடந்தது’ என்றார். இப்படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ், அஜித் குமார் மீண்டும் இணையவே இல்லை. ஓரிரு படங்களுக்கான பேச்சுவார்த்தை நடந்தாலும், அவை இறுதிக்கட்டத்துக்கு நகரவில்லை. சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடித்துள்ள ‘மதராஸி’ என்ற படத்தை இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ், வரும் செப்டம்பர் 5ம் தேதி படத்தை வெளியிடுகிறார். அடுத்த படம் குறித்து இன்னும் அவர் முடிவு செய்யவில்லை.