தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

தூக்கமின்மையால் அவதிப்படும் அஜித்

சென்னை: ‘குட் பேட் அக்லி’ படத்தை அடுத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் தனது 64வது படத்தில் நடிக்க போகிறார் அஜித்குமார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் தீவிரமாக பங்கேற்று வரும் அஜித்குமார், துபாய், பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். இந்த போட்டிகளில் அஜித் குமாரின் அணி மூன்றாவது பரிசு வென்று சாதித்துள்ளது. இந்நிலையில் ஆங்கில யூடியூப் சேனலுக்கு அஜித் குமார் ஸ்பெயினில் பேட்டி தந்தார்.

அதில் அவர் கூறியது: கார் ரேஸ்களில் கவனம் செலுத்த தொடங்கிய பிறகு சினிமா, வெப் தொடர்கள் பார்க்க கூட எனக்கு நேரம் கிடைப்பதில்லை. விமானத்தில் பயணிக்கும் போதும் மட்டுமே ஓய்வு கிடைக்கிறது. அந்த நேரத்தில் கூட தூங்கி விடுகிறேன். முக்கியமாக எனக்கு தற்போது தூங்குவது தான் ஒரு பிரச்னையாக உள்ளது. அப்படியே தூங்கினாலும் கூட ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் தான் தூங்குகிறேன். அந்த அளவுக்கு தூக்கமும் எனக்கு ஒரு பிரச்னையாக மாறியுள்ளது. இவ்வாறு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் அஜித் குமார்.