எந்த சாமி உருவத்தை அஜித் பச்சை குத்தினார்: பரபரப்பு தகவல்
ெசன்னை: பல்வேறு வெளிநாடுகளில் கார் ரேஸில் பங்கேற்று வந்த அஜித் குமார், அந்த பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, இந்தியா திரும்பிவிட்டார்.‘ஏகே 64’ படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்னர் நடிகர் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் உடன் கேரள மாநிலம் பாலக்காடில் உள்ள தன்னுடைய குல தெய்வமான ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மன் கோயிலுக்கு நேற்றுமுன்தினம் இரவு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அஜித்தின் தந்தை பாலக்காடைச் சேர்ந்தவர் என்பதால், அவர்களின் குலதெய்வமாக ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மன் கருதப்படுகிறது. அங்கு அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகின.
அதில் அவர் நெஞ்சில் சாமி உருவத்தை பச்சை குத்தி இருப்பது தெரியவந்தது. அதைப்பார்த்த நெட்டிசன்கள் அது என்ன சாமி என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி அவர் தன்னுடைய குல தெய்வமான ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மனின் உருவத்தை தான் தன் நெஞ்சில் பச்சை குத்தி இருக்கிறார். இது அவர் அந்த கடவுள் மீது வைத்திருக்கும் பக்தியைக் காட்டுகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
