தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கிளாமராக நடிக்க மாட்டேன்: அக்‌ஷரா ரெட்டி

 

சென்னை: ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி சார்பில் திருமால் லட்சுமணன், டி.ஷியாமளா தயாரித்துள்ள படம், ‘ரைட்’. எம்.பத்மேஷ் ஒளிப்பதிவு செய்ய, குணா பாலசுப்ரமணியன் இசை அமைத்துள்ளார். சுப்ரமணியன் ரமேஷ் குமார் எழுதி இயக்கியுள்ளார். நட்டி, அருண் பாண்டியன், அக்‌ஷரா ரெட்டி நடித்துள்ளனர். ‘வீரம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த யுவினா பார்கவி, இதில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக் முக்கிய வேடத்தில் அறிமுகமாகிறார்.

அக்‌ஷரா ரெட்டி கூறும்போது, ‘சினிமாவுக்கு நான் புதிது. ஆனால், தமிழ் மக்களுக்கு என்னை நன்கு தெரியும். டி.வி நிகழ்ச்சி மூலம் என்னை அவர்கள் வீட்டு பெண்ணாகவே நினைக்க ஆரம்பித்துவிட்டனர். அம்மாதான் என்னை முழுமையாக கவனித்துக்கொண்டார். திடீரென்று அவர் மறைந்த பிறகு எப்படி நான் திரைத்துறையில் இருப்பது என்று தயங்கினேன். ஆனால், இந்த டீம் என்னை அன்புடன் பார்த்துக்கொண்டனர். கிளாமராக நடிக்க வேண்டாம் என்று நினைத்தேன்’ என்றார்.