தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

அலியாவின் ‘ஆல்ஃபா’: திடீர் மாற்றம்

இதுவரை ஹீரோவை மட்டுமே மையப்படுத்திய படங்களை தயாரித்த யஷ் ராஜ் பிலிம்ஸ், தற்போது ஹீரோயினை முன்னிலைப்படுத்தி தயாரித்துள்ள படம், ‘ஆல்ஃபா’. இதில் அலியா பட் நடித்துள்ளார். முதலில் டிசம்பர் 25ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், யுனிவர்ஸ் படங்களில் கடைசியாக வெளியான ‘வார் 2’ என்ற படம் படுதோல்வி அடைந்த நிலையில், தற்போது ‘ஆல்ஃபா’ படத்தில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. எனவே, வரும் டிசம்பரில் படத்தை வெளியிடாமல், அடுத்த ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடியவில்லை என்பதும் முக்கிய காரணமாகும். அலியா பட்டுடன் நடிப்பவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஷிவ் ரவைல் இயக்குகிறார்.