தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ரசிகர்களுக்கு விருதை அர்ப்பணித்த அல்லு அர்ஜுன்

ஐதராபாத்: தனக்கு கிடைத்த தன்நிகரற்ற கலைஞன் விருதை ரசிகர்களுக்கு அர்ப்பணித்திருக்கிறார் அல்லு அர்ஜுன். புஷ்பா 2 படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஸ்டார் ஆகிவிட்டார் அல்லு அர்ஜுன். மும்பையில் தாதா சாகேப் பால்கே சர்வதேச விருதுகள் விழா சமீபத்தில் நடந்தது. இதில் தன்நிகரற்ற கலைஞன் என்கிற விருது அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டது. இது குறித்து டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘இந்த விருதுக்காக என்னை தேர்வு செய்த நடுவர் குழுவிற்கு நன்றி. விருதுகள் என்னை மென்மேலும் பொறுப்பு மிக்க கலைஞனாக மாற்ற உதவுகிறது. அதனால் அதை மதிக்கிறேன். இந்த விருதினை எனது ரசிகர்களுக்கு உளமார அர்ப்பணிக்கிறேன்’’ என அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பில் இருப்பதால் அல்லு அர்ஜுன் விருது விழாவில் பங்கேற்கவில்லை.