தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

அமெரிக்காவிலிருந்து ஜோடியாக வந்த ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா

ஐதராபாத்: தெலுங்கு திரை உலகில் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக கிசு கிசுவில் சிக்கியுள்ள ஜோடி என்றால் அது விஜய் தேவர கொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும்தான். இவர்கள் இருவரும் காதலிப்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் இதை விஜய் தேவரகொண்டா இதுவரை வாய்திறந்து சொன்னதில்லை. ராஷ்மிகாவிடம் கேட்டபோது, அதுதான் எல்லோருக்குமே தெரியுமே என சூசகமாக சொல்லிவிட்டார். இந்நிலையில் தான் சமீபத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற 43வது இந்தியா டே நிகழ்ச்சியில் கிராண்ட் மார்ஷல்ஸ் என்கிற சிறப்பு விருந்தினர்களாக இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர்.

அதாவது ஆண்டுதோறும் நம் நாட்டின் சுதந்திர தினத்தை நியூயார்க் நகரில் இந்தியா டே என்ற நிகழ்ச்சியை வைத்து கொண்டாடுவார்கள். இதில் சினிமா பிரபலங்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டுக்கான நிகழ்வில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஜோடியாக பங்கேற்றனர். இதனை தொடர்ந்து அமெரிக்காவிலேயே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் ஒன்றாகவே ஐதராபாத் திரும்பியுள்ளனர். ஐதராபாத் விமான நிலையத்தில் இவர்கள் இருவரும் தங்களது முகத்திற்கு மாஸ்க் அணிந்தபடி அதேசமயம் ரசிகர்களின் தொந்தரவு எதுவும் இல்லாமல் ஹாயாக பேசிக்கொண்டே நடந்து செல்வது போன்று ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.