சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட திடீர் பயம்

பிரபல நடிகர், நடிகைகளை அவர்களது ரசிகர்களுடன் இணைக்கும் ‘ஃபேன்லி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற தனி செயலியை அறிமுகம் செய்த சிவகார்த்திகேயன் பேசுகையில், ‘எனக்கு மூளை குறைவு. அதனால்தான் என்னால் நடிகராக தொடர்ந்து நீடிக்க முடிகிறது. ஒருவேளை மூளை அதிகமாக இருந்திருந்தால், இயக்குனரை டார்ச்சர் செய்ய ஆரம்பத்திருப்பேன். இப்போது அவர்கள் சொல்வதை கேட்டு நடித்து வருகிறேன். எனக்கு எப்போதுமே...

‘99/66’ படத்தில் அமானுஷ்ய சம்பவங்கள்

By Suresh
05 Dec 2025

மித்ரா பிக்சர்ஸ் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசை அமைத்து தயாரித்து நடித்துள்ள படம், ‘99/66 தொண்ணூற்று ஒன்பது அறுபத்தியாறு’. சபரி, ரோஹித், ரச்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா, பவன் கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம்புலி, புஜ்ஜி பாபு, ஜாவா சுந்தரேசன் (சாம்ஸ்), அம்பானி சங்கர், முல்லை...

சமந்தாவின் ஒன்றரை கோடி மோதிரம்

By Suresh
05 Dec 2025

தென்னிந்திய படவுலகின் முன்னணி நடிகை சமந்தா, கடந்த 1ம் தேதி வெப்தொடர் இயக்குனர் ராஜ் நிடிமோருவை ரகசிய காதல் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து அவர் வெளியிட்ட போட்ேடாக்களை அவரது ரசிகர்கள் இணையதளங்களில் பகிர்ந்து வைரலாக்கினர். பலர் பொறாமையுடன் சமந்தாவையும், திருமணத்தையும் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், இதுவரை யாருக்கும் சமந்தா பதில் சொல்லவில்லை. வழக்கம்போல் சோஷியல் மீடியாவில்...

ஷாருக்கானின் 4 கோடி கேரவன்

By Suresh
05 Dec 2025

‘பாலிவுட் பாட்ஷா’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி நடிகரும், தயாரிப்பாளருமான ஷாருக்கான், கடந்த 2023ல் இந்தியில் ‘பதான்’, ‘ஜவான்’ ஆகிய படங்களில் நடித்தார். இப்படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்றன. 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தன. ‘டன்கி’ என்ற படம் மட்டும் சுமாரான வரவேற்பு பெற்றது. தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘கிங்’...

ஏஐ மூலம் ஆபாசம் ராஷ்மிகா ஆவேசம்

By Karthik Raj
04 Dec 2025

ஐதராபாத்: ஏஐ தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பிரபல நடிகை ராஷ்மிகா தனது வேதனையையும் ஆதங்கத்தையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில், ‘‘எப்போது உண்மைகள் உற்பத்தி பொருளாக மாறுகிறதோ, பகுத்தறிவுதான் நமக்கு சிறந்த பாதுகாப்பு. ஏஐ என்பது முன்னேற்றத்திற்கான ஒரு சக்தியாகும், ஆனால் அதை தவறாக பயன்படுத்துவதும், பெண்களை குறிவைக்கும் ஆபாச...

50 வருடங்களுக்கு பிறகும் ஹீரோவாகவே நடிக்கிறேன்: சென்னையில் பாலகிருஷ்ணா பெருமிதம்

By Karthik Raj
04 Dec 2025

சென்னை: எம்.தேஜஸ்வினி நந்தமூரி வழங்கும் 14 ரீல்ஸ் பிளஸ் தயாரித்துள்ள படம், ‘அகண்டா 2: தாண்டவம்’. ராம் ஆசம்டா, கோபிசந்த் ஆசம்டா, கோடி பருச்சுரி தயாரித்துள்ளனர். சி.ராம் பிரசாத், சந்தோஷ் டி.டெடாகே ஒளிப்பதிவு செய்துள்ளனர். தமன், இசை. போயப்பட்டி ஸ்ரீனு எழுதி இயக்கியுள்ளார். பாலகிருஷ்ணா, ஆதி பினிஷெட்டி, சம்யுக்தா மேனன், விஜி சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், சாய்...

15 நிமிட தியானம் வாழ்க்கையை மாற்றியது: 2வது திருமணம் பற்றி சமந்தா நெகிழ்ச்சி

By Karthik Raj
04 Dec 2025

சென்னை: நடிகை சமந்தாவுக்கும் இயக்குனர் ராஜ் நிடிமோருவுக்கும் சில நாட்களுக்கு முன் கோவை ஈஷா யோகா மையத்தில் 2வது திருமணம் நடந்தது. புதுமண தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சமந்தா போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் கவனத்தை ஈர்த்திருக்கிறது. நாக சைதன்யாவுடன் தெலுங்கு படத்தில் நடித்தபோது அவருக்கும் சமந்தாவுக்கும் ஏற்பட்ட காதலை தொடர்ந்து கடந்த...

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்களை உருவாக்கிய தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணன் காலமானார்

By Karthik Raj
04 Dec 2025

சென்னை: ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், பிரபல தயாரிப்பாளருமான ஏவிஎம்.சரவணன் (86), வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னோடிகளின் ஒருவரான தயாரிப்பாளரும், இயக்குனருமான ஏவி.மெய்யப்ப செட்டியாருக்கு பிறகு ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ், ஏவிஎம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களை வெற்றிகரமாக நிர்வகித்து...

சர்ச்சையை ஏற்படுத்திய சமந்தாவின் ஒப்பனைக்கலைஞர்

By Neethimaan
04 Dec 2025

கடந்த 1ம் தேதி சமந்தாவும், இயக்குனர் ராஜ் நிடிமோருவும் திடீரென்று திருமணம் செய்துகொண்டனர். இது அவர்கள் இருவருக்குமே 2வது காதல் திருமணமாகும். நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் அவர்களது திருமணம் நடந்தது. இதையடுத்து அவர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்தது. தனது திருமண போட்டோக்களை சமந்தா சோஷியல் மீடியாவில்...

கிரித்தி ஷெட்டியின் திடீர் மகிழ்ச்சி

By Neethimaan
04 Dec 2025

தென்னிந்திய படவுலகில் தனது அழகு மற்றும் இளமையால் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர், கிரித்தி ஷெட்டி. 2021ல் வெளியான ‘உப்பெனா’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான அவர், தொடர்ந்து தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். தற்போது தமிழில் பிரதீப் ரங்கநாதனுடன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள...