5 வருடங்களாக உருவான அனிமேஷன் படம்
நாளை 3டியில் திரைக்கு வரும் இப்படம் குறித்து அஸ்வின் குமார், இசை அமைப்பாளர் சாம் சி.எஸ் இணைந்து அளித்த பேட்டி வருமாறு:
தொடர்ந்து 5 வருடங்கள் கடுமையாக உழைத்து, நரசிம்மர் மற்றும் வராஹரின் காவியக்கதையை, இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாக்கியுள்ளோம். விஷ்ணுவின் தீவிர சீடரான பிரஹலாதனை மையப்படுத்தி கதை நகர்கிறது. அவர் தனது நாத்திக தந்தை இரண்யகசிபுவின் எதிர்ப்பை மீறி விஷ்ணுவை வணங்குகிறார். இறைவன் பிரம்மாவிடம் இருந்து அமரத்துவம் பெற்ற இரண்யகசிபுவை அழிக்க, பகவான் விஷ்ணு தனது அரிய அவதாரமான நரசிம்மராக அவதரிக்கிறார். விஷ்ணுவின் அவதாரமான மகா அவதார் நரசிம்மரின் பிறப்புடன் கூடிய நம்பிக்கையின் கர்ஜனையை படம் வெளிப்படுத்துகிறது. மிகப் பிரமாண்டமான காட்சிகள், சாம் சி.எஸ்சின் அற்புதமான பின்னணி இசையுடன் படம் உருவாகியுள்ளது.