அன்பு மயில்சாமி நடிக்கும் தந்த்ரா
சென்னை: எஸ் ஸ்கிரீன் சார்பில் சுஷ்மா சந்திரா தயாரித்துள்ள படம், ‘தந்த்ரா’. இதில் அன்பு மயில்சாமி, பிருந்தா, சாம்ஸ், சுவாமிநாதன், நிழல்கள் ரவி, மனோபாலா, நடித்துள்ளனர். கணேஷ் சந்திரசேகரன் இசை அமைக்க, ஹாபிஸ் எம்.இஸ்மாயில் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் வெளியிடுகிறார்.
படம் குறித்து இயக்குனர் வேதமணி கூறுகையில், ‘இந்த உலகம் முழுவதும் முழுமையாக நல்லதாக மாற வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில், கெட்டது முழுமையாக ஆட்சி செய்யவும் வாய்ப்பு இல்லை. நல்லதும், கெட்டதும் நிறைந்திருப்பதுதான் உலகம். அதைப்பற்றி சொல்லும் இப்படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது’ என்றார்.