விரைவில் வருகிறது அஞ்சான் ரீ-எடிட் வெர்ஷன்
சென்னை: லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, வித்யூத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் திரைக்கு வந்த படம், ‘அஞ்சான்’. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். அப்போது சுமாராக ஓடிய இப்படம், தற்போது ரீ-எடிட் செய்யப்பட்டு மீண்டும் திரைக்கு வர தயாராகி வருகிறது. கடந்த 2014 ஆகஸ்ட் 15ம் தேதி படம் வெளியாகி இருந்தது. 11 வருடங்களுக்கு பிறகு இப்படம் மீண்டும் திரையிடப்படுகிறது. முன்னதாக ‘அஞ்சான்’ படத்தின் இந்தி பதிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. எனவே, இப்படத்தை ரீ-எடிட் செய்து விரைவில் திரையிட திட்டமிட்டுள்ளதாக திருப்பதி பிரதர்ஸ் உறுதி செய்துள்ளது. ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை.