அனுபமாவை அழவைத்த கடைசி மெசேஜ்
ஐதராபாத்: மாரி செல்வராஜ் எழுதி இயக்கும் ‘பைசன்’ என்ற படத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன் அளித்துள்ள பேட்டியில், ‘எனது நீண்ட நாள் நண்பர் ஒருவருடன் சண்டை போட்டுவிட்டு, பல ஆண்டுகளாக அவருடன் பேசாமல் இருந்தேன். இந்தநிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு அவரிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்திருந்தது. என்ன பேசுவது என்று தெரியாமல், அந்த மெசேஜுக்கு பதில்அளிக்காமல் விட்டுவிட்டேன்.
ஆனால், இரு நாட்களுக்கு பிறகு அவர் இறந்த செய்தி அறிந்தேன். அவர் இறக்கும் முன்பு, எப்போதோ சண்டை போட்டிருந்த என்னிடம் பேச முயற்சித்து இருக்கிறார். ஆனால், நான்தான் கண்டுகொள்ளாமலேயே விட்டுவிட்டேன். என் வாழ்நாள் முழுக்க இது மறக்கவே முடியாத விஷயமாகவும், மனதில் ஆறாத காயமாகவும் இருக்கிறது. அவரது கடைசி மெசேஜ் என்னை அழவைத்து விட்டது. எவ்வளவு சண்டை போட்டாலும், இனிநல்ல நண்பர்களை இழந்துவிடக்கூடாது என்று அப்போது புரிந்துகொண்டேன்’ என்றார்.