தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

அனுபமாவுக்கு பட்டம் சூட்டிய ரஜிஷா

தற்போது 35வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் மலையாள நடிகை ரஜிஷா விஜயன், குறுகியகாலத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய ெமாழிகளில் நடித்து வரும் அவர், இதற்கு முன்பு ‘கர்ணன்’, ‘ஜெய் பீம்’, ‘சர்தார்’, ‘பைசன்: காளமாடன்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது கார்த்தியுடன் ‘சர்தார் 2’, மலையாளத்தில் மம்மூட்டியுடன் ‘களம்காவல்’, பான் இந்தியா படமான ‘கட்டாளன்’ ஆகிய படங்களில் நடித்து வரும் ரஜிஷா விஜயன் கூறுகையில், ‘என்னுடன் ‘பைசன்: காளமாடன்’ படத்தில் நடித்திருந்த அனுபமா பரமேஸ்வரன் மிகவும் அழகானவர், திறமையானவர், பந்தா இல்லாதவர்.

என்மீது அவருக்கும், அவரது வளர்ச்சியின் மீது எனக்கும் அதிக அக்கறை இருக்கிறது. பொதுவாக இரண்டு நடிகைகள் இருந்தால், அவர்களுக்கு மத்தியில் சண்டை சச்சரவு ஏற்படும், கருத்து வேறுபாடு வரும் என்று சொல்வார்கள். ஆனால், நாங்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாகி விட்டோம். யார் மீதும் யாருக்கும் பொறாமை கிடையாது. மலையாளம், தெலுங்கு, தமிழ் என்று பிசியாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன் ஒரு சவுத் இண்டியன் சூப்பர் ஸ்டார். அவருடன் என்னை ஒப்பிட முடியாது. காரணம், இன்னும் நான் அவரை போல் மெகா ஹிட் படங்களை கொடுக்கவில்லை’ என்றார். அவரது வெளிப்படையான பேச்சுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.