முதல் காதல் அனுபவம் அனுஷ்கா பளிச்
ஐதராபாத்: அனுஷ்கா பெயரை சொன்னாலே அவரின் திருமணம் குறித்து பேச்சுகள்தான் எழுகின்றன. திருமண வயதை கடந்த பிறகும் அனுஷ்கா இன்னும் சோலோவாக சுற்றி வருகிறார். இதன் காரணமாக, அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயங்கள் அடிக்கடி தலைப்பு செய்திகளாக மாறுகின்றன. பாகுபலி படத்தில் தன்னுடன் நடித்த பிரபாஸும் அனுஷ்காவும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும்...
இதற்கிடையே, அனுஷ்காவின் பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் அனுஷ்கா தனக்கு வந்த காதல் பிரபோசல் குறித்து பேசியிருக்கிறார். ‘‘நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, என் வகுப்பில் இருந்து ஒரு பையன் என்னிடம் வந்து, ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்றான். அவன் என்னை உயிருக்கு உயிராக நேசிப்பதாகச் சொன்னான். அந்த நேரத்தில், ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்றால் என்னவென்று கூட எனக்குத் தெரியவில்லை. ஆனால், ‘சரி’ என ஏற்றுக் கொண்டேன். காதல் என்னவென்றே புரியாத வயதில் நடந்து அது என் வாழ்க்கையில் ஒரு இனிமையான நினைவாகவே இன்றும் உள்ளது’’ என்று அனுஷ்கா கூறினார். இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.