தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

‘காட்டி’ பட புரமோஷனை புறக்கணித்த அனுஷ்கா

  ெசன்னை: தனது படத்தின் புரமோஷனை அனுஷ்கா புறக்கணித்துள்ளார். படத்தின் விளம்பரத்துக்கு அவர் தேவையில்லை என காட்டமாக கூறியுள்ளார் இயக்குனர். தமிழ், தெலுங்கில் இந்த வாரம் வெளியாகவுள்ள ‘காட்டி’ திரைப்படம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் கிரிஷ், தயாரிப்பாளர் ராஜீவ் ரெட்டி, நடிகர்கள் ஜெகபதி பாபு, விக்ரம் பிரபு கலந்து கொண்டனர். ஆனால் பட ஹீரோயின்...

 

ெசன்னை: தனது படத்தின் புரமோஷனை அனுஷ்கா புறக்கணித்துள்ளார். படத்தின் விளம்பரத்துக்கு அவர் தேவையில்லை என காட்டமாக கூறியுள்ளார் இயக்குனர். தமிழ், தெலுங்கில் இந்த வாரம் வெளியாகவுள்ள ‘காட்டி’ திரைப்படம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் கிரிஷ், தயாரிப்பாளர் ராஜீவ் ரெட்டி, நடிகர்கள் ஜெகபதி பாபு, விக்ரம் பிரபு கலந்து கொண்டனர். ஆனால் பட ஹீரோயின் அனுஷ்கா பங்கேற்கவில்லை. வழக்கமாக தனது படங்களின் புரமோஷன்களில் அனுஷ்கா பங்கேற்பார். ஆனால் இந்த முறை நயன்தாரா பாணியில் அவர் காட்டி பட புரமோஷன்களை புறக்கணித்திருக்கிறார்.

அனுஷ்கா பட விளம்பரங்களில் பங்கேற்காதது குறித்த கேள்விகளுக்கு கிரிஷ் பதிலளிக்கையில், “விளம்பரங்களில் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாததும் அவரது சொந்த விருப்பம். காட்டி படத்திற்கு அனுஷ்காவின் விளம்பரம் தேவையில்லை.. அவரது நடிப்பு இருந்தால் போதும்” என்று கிருஷ் ஜாகர்லமுடி கூறினார். ‘சீலாவதி’ வேடத்தில் அனுஷ்கா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்றும், அனுஷ்கா போன்ற சூப்பர் ஸ்டார் நடித்த படம் என்பதால் காட்டி நிச்சயம் வணிக ரீதியாக வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

பவன் கல்யாண் நடித்த ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்திலிருந்து விலகியதற்கான காரணங்களை கிரிஷ் விளக்கினார். “பவன் கல்யாண் எனக்கு மிகவும் பிடித்தவர். நான் அவரை மிகவும் ரசிக்கிறேன். ஏ.எம். ரத்னம் தயாரித்த படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். அவர்களுடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. கோவிட்-19 சூழ்நிலைகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் அந்த படத்திலிருந்து விலக வேண்டியதாயிற்று” என்று தெரிவித்தார்.