ஹீரோக்கள் பான் இந்தியா நடிகர்களா? பிரியாமணி ஆவேசம்
சென்னை: படங்களில் கவனம் செலுத்தாமல் குடும்பத்துடன் தனது நேரத்தை செலவிட்டு வந்த பிரியாமணிக்கு தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் மிகப்பெரிய அங்கீகாரத்தையும் கம்பேக்கையும் கொடுத்தது. விரைவில் தி ஃபேமிலி மேன் சீசன் 3 வெளியாகவுள்ளது. இந்த ஆண்டு குட் ஒயிஃப் எனும் வெப்சீரிஸிலும் பிரியாமணி நடித்திருந்தார். சமீபத்தில் ஒரு நேர்காணலில், ‘‘பான்-இந்தியா என்ற சொல்லைப் பயன்படுத்துவதை நாம் நிறுத்த வேண்டும். இறுதியில் நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தப் ‘பான்-இந்தியா’ என்றால் என்ன என்று எனக்குப் புரியவில்லை’’ என்று பிரியாமணி கூறினார். ‘‘ஹீரோக்கள் பிற துறைகளில் பணியாற்றுகிறீர்கள் என்பது நல்ல விஷயம். ஆனால் பாலிவுட்டிலிருந்து தென்னிந்தியாவுக்கு வரும் ஒருவரை ‘பான் இந்தியா நடிகர்’ என்று அழைப்பதில்லை. பல ஆண்டுகளாக, இருதரப்பு நடிகர்களும் பல மொழிகளில் பணியாற்றி வருகின்றனர். இப்போது ஏன் திடீரென்று இத்தகைய அடையாளங்களைச் சூட்டுகிறோம்?’’ என்று அவர் கேள்வியெழுப்பினார்.
 
 