பிம்பத்தை உடைத்த அர்ஜூன் தாஸ்
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற படத்தை தொடர்ந்து விஷால் வெங்கட் இயக்கியுள்ள படம், ‘பாம்’. இதை கெம்பிரியோ பிக்சர்ஸ் சார்பில் சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரித்துள்ளனர். இதில் அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, ரமேஷ் திலக், பாலசரவணன், சிங்கம்புலி நடித்துள்ளனர். பி.எம்.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய, பி.எம்.மகிழ்நன் வசனம் எழுதியுள்ளார். இமான் இசை அமைத்துள்ளார். மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.
வரும் 12ம் தேதி ரிலீசாகும் இப்படம் குறித்து இமான் கூறுகையில், ‘முள் மீது நடப்பது போன்ற ஒரு கடினமாக கதையை, மிகவும் கவனமாக படமாக்கியுள்ளார் விஷால் வெங்கட். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை பார்த்தவுடன், அவருடன் ஒரு படத்திலாவது பணிபுரிய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது இப்படத்தில் நிறைவேறியுள்ளது. நமது மண்ணின் வாழ்வியலைப் பற்றி சொல்லும் இதுபோன்ற படங்களுக்கு எனது இசையின் மூலம் உயிர் கொடுக்க முயற்சித்து, அதில் நூறு சதவீதம் வெற்றிபெற்றுள்ளேன். அர்ஜூன் தாஸ் தனது வழக்கமான பிம்பத்தை உடைத்து, இப்படத்தில் புதிய பாணியில் நடித்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்’ என்றார்.