தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

பிரபல நடிகையின் முத்த மழையில் நனைந்த ஏ.ஆர்.ரஹ்மான்

மும்பை: பாலிவுட் சீனியர் நடிகை ரேகா (70) நடிப்பில் கடந்த 1981ல் திரைக்கு வந்த இந்தி படம், ‘உம்ரா ஜான்’. இப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படும் நிலையில், மும்பையில் திரை பிரபலங்களுக்கான பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது. ஆமிர் கான், ஹேமமாலினி, தபு, அனில் கபூர் உள்பட பலர் படத்தை பார்த்து ரசித்தனர். முன்னதாக சிவப்புக்கம்பள...

மும்பை: பாலிவுட் சீனியர் நடிகை ரேகா (70) நடிப்பில் கடந்த 1981ல் திரைக்கு வந்த இந்தி படம், ‘உம்ரா ஜான்’. இப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படும் நிலையில், மும்பையில் திரை பிரபலங்களுக்கான பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது. ஆமிர் கான், ஹேமமாலினி, தபு, அனில் கபூர் உள்பட பலர் படத்தை பார்த்து ரசித்தனர். முன்னதாக சிவப்புக்கம்பள வரவேற்பின் போது, படம் பார்க்க வந்திருவர்களை புன்னகையுடன் வரவேற்று மகிழ்ந்த ரேகா, அவர்களை இறுக கட்டியடிணைத்து நடனம் ஆடினார். திடீரென்று சிலருக்கு முத்தம் கொடுத்து அசத்தினார்.

அனில் கபூரை கட்டியணைத்த அவர், தனது சிக்னேச்சர் ஸ்டெப்ஸை வெளிப்படுத்தி நடனமாடியது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.  அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் வந்தபோது ஓடிச்சென்று வரவேற்ற ரேகா, அவரை இறுக கட்டியணைத்தார். தன்னுடைய அன்பை வெளிப்படுத்துகின்ற விதமாக கன்னத்தில் முத்த மழை பொழிந்தார். அவரது முகத்தை பிடித்து கொஞ்சினார். அவரது இச்செயலை கண்டு மகிழ்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், தனது செல்போனில் இக்காட்சியை செல்பி எடுத்து சோஷியல் மீடியா வில் பதிவிட்டார். தற்போது அந்த போட்டோக்களும், வீடியோவும் வைரலாகி வருகிறது.