அருண் விஜய்யின் ரெட்ட தல டிசம்பர் 18ல் ரிலீஸ்
சென்னை: பிடிஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலசந்திரன் தயாரித்துள்ள படம், ‘ரெட்ட தல’. இதை ‘மான் கராத்தே’ கிரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ளார். ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், வரும் டிசம்பர் 18ம் தேதி ரிலீசாகிறது. இதில் அருண் விஜய் மிகவும் வித்தியாசமான இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அருண் விஜய் ஜோடியாக இத்னானி நடித்துள்ளார். மற்றும் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெராடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளனர். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். ஆண்டனி எடிட்டிங் செய்ய, அருண் சங்கர் துரை அரங்கம் அமைத்துள்ளார். சுரேன்.ஆர், பாபி ஆண்டனி நடனப் பயிற்சி அளித்துள்ளனர். கார்த்திக் நேத்தா, சாம் சி.எஸ்., விவேகா பாடல்கள் எழுதியுள்ளனர்.
