தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஆர்யன் கிளைமாக்ஸ் திடீர் மாற்றம்: விஷ்ணு விஷால் தகவல்

சென்னை: பிரவீன்.கே இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சவுத்ரி, செல்வராகவன் நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிபெற்றுள்ள படம், ‘ஆர்யன்’. ஜிப்ரான் வைபோதா இசை அமைத்தார். இப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா நேற்று சென்னையில் நடந்தது. அப்போது படக்குழுவினருடன் கலந்துகொண்ட விஷ்ணு விஷால் பேசியதாவது: ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கருத்துகளை சொல்ல வேண்டும் என்பது என் எண்ணம். அதற்காகத்தான் சொந்தப் பட தயாரிப்பில் ஈடுபட்டேன். ‘ஆர்யன்’ படத்துக்கு அனைத்து தரப்பிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தயாரிப்பாளராகிய எனக்கும் லாபம் கிடைத்திருக்கிறது. கிளைமாக்சில் செல்வராகவன் தனது தரப்பு நியாயத்தை சொல்வது போல் அமைந்த காட்சிகள் குறித்து பலரது அபிப்பிராயங்களை கேட்டோம். பிறகு நாங்கள் ஏற்கனவே படமாக்கி வைத்திருந்த காட்சிகளை பற்றி விவாதித்து, தற்போது செல்வராகவன் தரப்பு நியாயங்களை நாங்கள் சொல்வது போல், சில நிமிட காட்சிகளை மாற்றியுள்ளோம். இப்போது படம் வெளியான அனைத்து தியேட்டரிலும் புதிய கிளைமாக்ஸ் இடம்பெற்றுள்ளது.