அசோக் செல்வன் ஜோடியாகும் நிமிஷா சஜயன்
சென்னை: அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் நடிகர் சசிக்குமார், இயக்குநர் இரா சரவணன் ஆகியோர் கலந்துகொள்ள, மிகச் சிறப்பான முறையில் பூஜையுடன், நேற்று துவக்கப்பட்டது. படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவன தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில்...
சென்னை: அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் நடிகர் சசிக்குமார், இயக்குநர் இரா சரவணன் ஆகியோர் கலந்துகொள்ள, மிகச் சிறப்பான முறையில் பூஜையுடன், நேற்று துவக்கப்பட்டது. படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவன தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் இணைந்து தயாரிக்கிறார்கள். இதில் அசோக் செல்வன் ஜோடியாக நடிகை நிமிஷா சஜயன் நடிக்கிறார். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக, மணிகண்டன் ஆனந்தன் இப்படத்தை இயக்குகிறார். திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். புஷ்ப ராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் விக்ரமன் எடிட்டிங் பணிகளை கையாளுகிறார்.