தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கூடுதலாக செலவழித்து ஆட்டோகிராஃப் புதுப்பித்துள்ளேன்: சேரன் உருக்கம்

சென்னை: சேரன் எழுதி இயக்கி தயாரித்து நடித்துள்ள ‘ஆட்டோகிராஃப்’ என்ற படம், வரும் 14ம் தேதி மீண்டும் திரைக்கு வருகிறது. இதுகுறித்து அவர் உருக்கமாக பேசியதாவது: இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்கு சென்றடைவதற்காக, 21 வருடங்களுக்கு பிறகு ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் நிறைய மாற்றங்களை செய்துள்ளேன். நான் இப்படித்தான் படமெடுப்பேன். வணிக நோக்கத்துக்காக எடுத்திருந்தால், என்றைக்கோ நான் காணாமல் போயிருக்கலாம். ‘ஆட்டோகிராஃப்’ படம் முதலில் வெளியானபோது திரையரங்குகளில் மக்கள் கூட்டம் இல்லை. படத்தை பற்றிய விமர்சனங்கள் பத்திரிகைகளில் வெளியான பிறகுதான் கூட்டம் அதிகரித்தது. இந்த படத்தை மீண்டும் எடிட்டிங் செய்து, 15 நிமிடங்களை குறைத்துள்ளேன். இன்றைய சூழலுக்கு ஏற்ற வகையில் கலர் கரெக்‌ஷன் செய்திருக்கிறேன். இசை பழமை வாய்ந்ததாக இருக்குமே, அதுகூட ரசிகர்களுக்கு சோர்வை ஏற்படுத்திவிட கூடாது என்பதற்காக, டால்பி அட்மாஸ் போன்ற புதிய இசை நுட்பங்களை இணைத்துள்ளோம். பார்வையாளர்களை ஏமாற்றக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். படத்தை புதுப்பிக்க கூடுதலாக 50 லட்ச ரூபாய் செலவழித்துள்ளேன்.