அக்டோபர் 31ல் ‘பாகுபலி: தி எபிக்’
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, நாசர் நடிப்பில் திரைக்கு வந்த ‘பாகுபலி 1’, ‘பாகுபலி 2’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்று, வசூலிலும் சாதனை படைத்தன. இந்நிலையில் ‘பாகுபலி 1’, ‘பாகுபலி 2’ ஆகிய இரு பாகங்களை இணைத்து, சில காட்சிகளை மட்டும் நீக்கி, அதை ஒரே பாகமாக ‘பாகுபலி: தி எபிக்’ என்று புதிய பதிப்பாக, வரும் அக்டோபர் 31ம் தேதி பல்வேறு மொழிகளில் வெளியிடுகின்றனர். இப்படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியிடுகின்றனர். மேலும், டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.