தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

பேட் கேர்ள் விமர்சனம்

  மிடில் கிளாஸ் ராம், சாந்திப்பிரியா தம்பதியின் மகள் அஞ்சலி சிவராமனுக்கு படிப்பை விட காதல் நன்றாக வருகிறது. சக மாணவன் ஹிர்து ஹாரூனுடன் காதல் மலர்ந்து உறவு ஏற்படுகிறது. இதற்கு அஞ்சலி சிவராமனின் பெற்றோர் தடை விதிக்க, ஹிர்து ஹாரூனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்கிறது. பிறகு மற்றொரு மாணவனை காதலித்து நெருக்கமாகிறார்....

 

மிடில் கிளாஸ் ராம், சாந்திப்பிரியா தம்பதியின் மகள் அஞ்சலி சிவராமனுக்கு படிப்பை விட காதல் நன்றாக வருகிறது. சக மாணவன் ஹிர்து ஹாரூனுடன் காதல் மலர்ந்து உறவு ஏற்படுகிறது. இதற்கு அஞ்சலி சிவராமனின் பெற்றோர் தடை விதிக்க, ஹிர்து ஹாரூனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்கிறது. பிறகு மற்றொரு மாணவனை காதலித்து நெருக்கமாகிறார். அளவற்ற சுதந்திரம் அஞ்சலி சிவராமனை என்ன செய்கிறது என்பது மீதி கதை. டீன்ஏஜில் இருந்தே சுதந்திரமாக வாழ ஆசைப்படும் ஒரு பெண்ணுக்கு குடும்பமும், சமூகமும் விதிக்கும் தடைகள் என்ன? அதை எப்படி உடைத்து வாழ்கிறார் என்பதை அப்பெண்ணின் கோணத்தில் எழுதி இயக்கியுள்ளார், வர்ஷா பரத். சுதந்திரமாக வாழ துடிக்கும் கேரக்டரில் அஞ்சலி சிவராமன், நியாயமான நடிப்பை வழங்கியுள்ளார்.

 

மகளுக்காக துடிக்கும் பொறுப்புள்ள அம்மாவாக, டீச்சராக, சாந்திப்பிரியா நடித்துள்ளார். ஹிர்து ஹாரூன், இர்ஃபான், ராம், டீஜே அருணாசலம், சரண்யா ரவிச்சந்திரன், சஷாங் பொம்மிரெட்டி பிள்ளை, நேகா, பார்வதி பாலகிருஷ்ணன் உள்பட அனைவரும் இயல்பாக நடித்து கவனத்தை ஈர்க்கின்றனர். மூன்று காலக்கட்டத்துக்கான ஒளிப்பதிவை பிரின்ஸ் ஆண்டர்சன், பிரீதா ஜெயராமன், ெஜகதீஷ் ரவி நேர்த்தியாக வழங்கியுள்ளனர். அமித் திரிவேதி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம். வெற்றிமாறன் தயாரித்துள்ளார். ஒரு சாரார் ரசிக்கும் படமாகவே இது அமைந்திருக்கிறது.