தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாகும் நயன்தாரா

பாலகிருஷ்ணா நடித்துள்ள ‘அகண்டா 2’ என்ற பான் இந்தியா படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதையடுத்து கோபிசந்த் மலினேனி இயக்கும் படத்துக்கு பாலகிருஷ்ணா கால்ஷீட் கொடுத்துள்ளார். வரலாற்று பின்னணியில் பிரமாண்டமாக உருவாக்கப்படும் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அவர் கிரீன் சிக்னல் கொடுத்ததை தொடர்ந்து, விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. ஏற்கனவே தெலுங்கில் உருவான ‘சிம்ஹா’, ‘ஜெய் சிம்ஹா’, ‘ஸ்ரீராம ராஜ்ஜியம்’ ஆகிய படங்களில் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். தற்போது இந்த புதிய படத்தில் மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க சம்மதித்ததை பாலகிருஷ்ணா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்தின் காட்சிகளை படமாக்குவதற்கான லொகேஷன்களை தேர்வு செய்ய கோபிசந்த் மலினேனி ராஜஸ்தான் சென்றுள்ளார். தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து கடந்த 2021ல் வெளியான ‘அகண்டா’ என்ற படம் சூப்பர் ஹிட்டானது. போயபட்டி ஸ்ரீனு இயக்கிய இதில் பாலகிருஷ்ணா இரட்டை வேடங்களில் நடித்தார். இப்படத்தின் 2ம் பாகம் ஃபேண்டஸி கலந்த ஆக் ஷன் படமாக உருவாகியுள்ளது. பாலகிருஷ்ணா, சம்யுக்தா மேனன், ஆதி பினிஷெட்டி, ஹர்ஷாலி மல்ஹோத்ரா நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ள இப்படம், வரும் டிசம்பர் 5ம் தேதி தமிழிலும் வெளியாகிறது.