உண்மை சம்பவ பின்னணியில் போகி
சென்னை: விஐ குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் படத்திற்கு ‘போகி’ என்று பெயரிட்டுள்ளனர் இந்தப் படத்தில் நபி நந்தி, சரத், லப்பர் பந்து படத்தில் நடித்த சுவாசிகா, பூனம் கவூர், வேலாராமமூர்த்தி, சங்கிலி முருகன், மொட்டை ராஜேந்திரன், எம். எஸ்.பாஸ்கர், முரு ஸ்டார் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு - ராஜா சி. சேகர்....
படம் பற்றி இயக்குனர் விஜயசேகரன் கூறும்போது, ‘‘உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். சுமார் 6000 அடி உயரத்தில் எந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத மலை கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர் ஹீரோ அழகர், தனது தங்கை கவிதாவை படிக்க வைக்கிறார். மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரிக்கு செல்ல அந்த மலை கிராமமே பெரும் கனவோடு வழி அனுப்பி வைக்கிறார்கள்.
இறுதியில் கவிதா மருத்துவம் படித்து கிராம மக்களுக்கு சேவை செய்தாரா என்ன நடந்தது என்பதே இந்த படத்தின் திரைக்கதை’’ என்றார். ஆகஸ்ட் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்தை பிஜிபி எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் பி.ஜி. பிச்சைமணி இந்தியா முழுவதும் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.