நான் ஒரு சிறந்த தாய்: தீபிகா படுகோன் பெருமிதம்
மும்பை: அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் பான்வேர்ல்ட் படத்திலும், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ என்ற பான் இந்தியா படத்திலும் நடித்து வரும் தீபிகா படுகோன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு பெண் குழந்தைக்கு தாயானார். அதற்கு ‘துவா படுகோன் சிங்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தாயான பிறகு ஏற்பட்ட கடமைகள் மற்றும் மாற்றங்கள் குறித்து தீபிகா படுகோன் பெருமிதத்துடன் பேசியுள்ளார். அது வருமாறு:
நான் தாயான பிறகுதான் எனக்கு பல்வேறு புதிய அனுபவங்கள் கிடைத்துள்ளன. என்னிடம் பொறுமை யும், கனிவும் கூடுதலாகி இருக்கிறது. தாய்மை என்னை கம்பர்ட் ஜோனிலிருந்து வெளியே தள்ளி, சமூக மயமான ஒரு நபராக மாற்றுகிறது. நான் ஒருபோதும் சமூக மயமான நபராக இருந்தது கிடையாது.
இப்போது பிளே ஸ்கூலில் மற்ற பெற்றோருடன் மனம்விட்டு பேசுகிறேன். தாய்மை உங்களை நல்லவிதத்தில், உங்கள் கம்பர்ட் ஜோனிலிருந்து வெளியே தள்ளுகிறது. நான் தாயாக வேண்டும் என்று பெரிதும் விரும்பினேன். அதனால்தான் இப்போது ஒரு நல்ல தாயாக எனது சிறந்த கதாபாத்திரத்தை செய்து வருகிறேன்.
