தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

‘அந்த 7 நாட்கள்’ தலைப்புக்கு பாக்யராஜ் எதிர்ப்பா?

கே.பாக்யராஜ் உதவியாளர் எம்.சுந்தர் எழுதி இயக்கியுள்ள படம், ‘அந்த 7 நாட்கள்’. பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் சார்பில் முரளி கபீர்தாஸ், செல்வகுமார்.டி தயாரித்துள்ளனர். கோபிநாத் துரை ஒளிப்பதிவு செய்ய, முத்தமிழன் ராமு விஎஃப்எக்ஸ் பணிகளை கவனித்து எடிட்டிங் செய்துள்ளார். ராகேஷ் ராக்கி சண்டைப் பயிற்சி அளிக்க, சச்சின் சுந்தர் இசை அமைத்துள்ளார். நடிகர் விஷ்ணுபிரியன் இணை...

கே.பாக்யராஜ் உதவியாளர் எம்.சுந்தர் எழுதி இயக்கியுள்ள படம், ‘அந்த 7 நாட்கள்’. பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் சார்பில் முரளி கபீர்தாஸ், செல்வகுமார்.டி தயாரித்துள்ளனர். கோபிநாத் துரை ஒளிப்பதிவு செய்ய, முத்தமிழன் ராமு விஎஃப்எக்ஸ் பணிகளை கவனித்து எடிட்டிங் செய்துள்ளார். ராகேஷ் ராக்கி சண்டைப் பயிற்சி அளிக்க, சச்சின் சுந்தர் இசை அமைத்துள்ளார். நடிகர் விஷ்ணுபிரியன் இணை இயக்கம் செய்துள்ளார். டி.கே.தினேஷ் குமார் அரங்கம் அமைத்துள்ளார். மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார். அஜித் தேஜ், ஸ்வேதா, கே.பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 12ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து எம்.சுந்தர் கூறுகையில், ‘படத்தின் கதையும், திரைக்கதை பாணியும் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

100 சதவீதம் நேர்மையாக படமாக்கியுள்ளேன். காதல் கதையில் கண்களுக்கும், சூரிய கிரகணத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பாக்யராஜிடம் பணியாற்றியதால், அவரிடம் ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘அந்த 7 நாட்கள்’ ஆகிய படங்களின் தலைப்புகளை கேட்டேன். பிறகு கதைக்கு பொருத்தமாக இருந்ததால், ‘அந்த 7 நாட்கள்’ தலைப்பை தேர்வு செய்தேன். பாக்யராஜின் படத்துக்கும், எனது படத்துக்கும் தலைப்பு தவிர வேறெந்த சம்பந்தமும் இல்லை. இதில் அமைச்சர் வேடத்தில் பாக்யராஜ் நடித்துள்ளார். தலைப்பு விஷயத்தில் பாக்யராஜ் எந்த பிரச்னையும் செய்யவில்லை. எதிர்க்கவும் இல்லை. கேட்டவுடன் பெருந்தன்மையுடன் கொடுத்துவிட்டார்’ என்றார்.