மெட்ராஸ் மாகாண கதையில் பாக்யஸ்ரீ
துல்கர் சல்மான் நடிக்கும் ‘காந்தா’ என்ற பான் இந்தியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 1950களின் மெட்ராஸ் மாகாணத்தை அடிப்படையாக வைத்து, ஒரு பீரியட் டிராமாவாக படம் உருவாகியுள்ளது. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரக்கனி நடித்துள்ளனர். ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா, துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. வரும் நவம்பர் 14ம் தேதி படம் திரைக்கு வருகிறது. துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ என்ற படம் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், ‘காந்தா’ படத்தின் வெளியீட்டை படக்குழு தள்ளிவைத்தது.
கடந்த ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆவணத்தொடர், ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’. இதை இயக்கியிருந்த செல்வமணி செல்வராஜ் ‘காந்தா’ படத்தை இயக்கியுள்ளார். இது ஒரு பான் இந்தியா படம் என்று சொல்லப்பட்டாலும், முதலில் தெலுங்கில் மட்டுமே நேரடியாக உருவாக்கப்பட்ட இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.