பிகினி அணிவதை விமர்சிப்பதா?: ரைசா வில்சன் கோபம்
தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் ரைசா வில்சன், சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‘நான் மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் நடிக்க வந்தேன். ஆரம்பகாலத்தில் எனக்கு இருந்த பயமும், பதற்றமும் இப்போது இல்லை. காரணம், இத்தனை ஆண்டுகளில் நான் பெற்ற அனுபவம்தான். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து, அதன்மூலம் மறக்க முடியாத அனுபவம் கிடைத்துவிடுகிறது. எனது திரைப்பயணம் எளிதானது இல்லை. வெற்றிகளும், தோல்விகளும் மாறி மாறி கிடைத்துள்ளது. அது நிறைய அனுபவங்களை கற்றுக்கொடுத்தது. அதேவேளையில், என்னைப் பற்றிய கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளவும் பழகிக்கொண்டேன். காதல், லிவிங் என்று என்னைப் பற்றி நிறைய விமர்சனங்களை சொல்லிவிட்டன. நீச்சல் குளத்தில் பிகினி அணிவதை கடுமையாக விமர்சித்தனர். என்னைப் பொறுத்தவரையில் எந்தவொரு விமர்சனத்தையும் தடுக்க முடியாது.
நான் படிக்கும் காலத்தில் காதலிக்க விரும்பாததால், யார் மீதும் எனக்கு காதல் வரவில்லை. படிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி அமைதியாக இருந்தேன். ஆனால், இப்போது எனக்கு மிகப் பொருத்தமான நல்ல காதலை எதிர்பார்க்கிறேன். ஆனால், இப்போது உண்மையாக காதலிக்க யாரும் முன்வருவது இல்லை. அப்படி இன்றுவரை என் வாழ்க்கையில் ஒருவர் கூட ‘செட்’ ஆகவில்லை. நான் எதிர்பார்க்கும் மாப்பிள்ளை மிகவும் பொறுமையாகவும், மனிதநேயம் கொண்டவராகவும், குடும்பத்தை கண்ணிமை போல் பாதுகாப்பவராகவும், குறிப்பாக அறிவாளியாகவும் இருக்க வேண்டும். தோற்றத்தில் கவர்ந்திழுக்க வேண்டும் என்று சொல்ல மாட்டேன். திரைப்படத்தில் யார், எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம். அது அவரவர் விருப்பம். கதைக்கு தேவைப்பட்டால் கிளாமராகவும் நடிக்கலாம்’ என்று பேசியுள்ளார். அடிக்கடி வெளிநாடு செல்வது குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை.