தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

பிகினியால் பிரச்னையில் சிக்கிய வேதிகா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடிக்கும் வேதிகா, கடந்த 2006ல் வெளியான ‘மதராஸி’ என்ற தமிழ் படத்தில் அர்ஜூன் ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘முனி 1’, சாந்தனுவுடன் ‘சக்கரகட்டி’, சிம்புவுடன் ‘காளை’, வசந்தபாலன் இயக்கத்தில் ‘காவியத்தலைவன்’ உள்பட பல படங்களில் நடித்தார். அவர் நடித்த ‘கஜானா’ என்ற படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. சில ஹிட் படங்களில் நடித்திருந்தாலும், பாலா இயக்கிய ‘பரதேசி’ என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார். தொடர்ந்து ‘யக்‌ஷினி’ என்ற வெப்தொடரில் நடித்தார்.

இது தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், திரைப்பட நடிகைகள் அணியும் ஆடை குறித்து அவர் பேசிய விஷயம் பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. வேதிகா பேசுகையில், ‘பொதுவாக நடிகை என்றாலே எளிதில் விமர்சித்து விடுகிறார்கள். அவர்களுக்கு பிடித்த உடைகளை அணிந்தால், உடனே அவர்களை பற்றி தவறாக பேச தொடங்கி விடுகின்றனர். உடைகளை வைத்து நடிகைகளை விமர்சிக்கும் போக்கு மாற வேண்டும்.

நான் கூட அவ்வப்போது பிகினி அணிகிறேன். சோஷியல் மீடியாவில் அந்த போட்ேடாக்களை நான் பதிவிடும்போது, அதனால் பல்வேறு தரப்பினரின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி அவதிப்படுகிறேன். ஆனால், அதற்காக நான் கவலைப்பட்டது கிடையாது. காரணம், இப்போது நான் யார் என்று எனக்கு நன்றாக தெரியும். என்னை பற்றி தவறாக பேசுபவர்கள்தான் மாற வேண்டும். தங்களை உடனடியாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும். அதுதான் அவர்களுக்கு நல்லது’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது போட்டோ மற்றும் பதிவு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.