தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

தமிழ்நாட்டின் பல்லுயிர் சூழலை காட்சிப்படுத்தும் வைல்ட் தமிழ்நாடு ஆவணப்படம்

சென்னை: சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் சார்பில் ஆர்த்தி கிருஷ்ணா தயாரித்து கல்யாண் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வைல்ட் தமிழ்நாடு’ என்ற ஆவணப்படம் சென்னை பி.வி.ஆர் சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்த ஆவணப்படம் நேச்சர் இன் ஃபோகஸ் மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. ரிக்கி கேஜ் இதற்கு இசை அமைத்துள்ளார். நடிகர் அரவிந்த் சாமி இதற்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டின் ஆச்சர்யமூட்டும் சுற்றுச்சூழல் செழுமையை இந்த ஆவணப்படம் வெளிப்படுத்துகிறது. கேமராக்களில் இதுவரை படம்பிடிக்கப்படாத வன விலங்குகளையும் நாம் இப்படம் மூலம் அறிந்து கொள்ள முடியும். இப்படம் குறித்து இயக்குனர் கல்யாண் வர்மா கூறும்போது, ‘‘இந்த ஆவணப்படம் எனது தொழில்முறை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும்.

கலாச்சாரமும், வனப்பகுதியும் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப்பிணைந்த ஒரு நிலத்தின் ஆழமான கதையை பகிர்ந்து கொள்வதுதான் என்னுடைய நோக்கம். வியக்க வைக்கும் பன்முகத்தன்மை கொண்ட வாழ்விடங்களை தக்கவைத்திருப்பதில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது” என்றார்.