பிளாக் கோல்ட் உலகத்தை காட்டும் டீசல்
சென்னை: ‘டீசல்’ என்ற படத்தை சண்முகம் முத்துசாமி எழுதி இயக்கியுள்ளார். மீனவனாக ஹரீஷ் கல்யாண், அவரது ஜோடியாக வழக்கறிஞர் வேடத்தில் அதுல்யா ரவி நடித்துள்ளனர். தேவராஜுலு தயாரித்துள்ளார். படம் குறித்து ஹரீஷ் கல்யாண் கூறியதாவது: தங்கத்தை விடவும் பெட்ரோல் -டீசல் மக்களுடைய அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடையது.
குறிப்பாக, பிளாக் கோல்ட் எனப்படும் கச்சா எண்ணெய் அதிகம் உபயோகப்படுத்தப்படும் வளம். நாம் அடிக்கடி பெட்ரோல் பங்க் செல்வோம். ஆனால், அதற்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை பற்றி அரிதாகவே யோசிப்போம். இந்த படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். இவ்வாறு ஹரீஷ் கல்யாண் கூறினார்.