சாலையோர மக்களுக்கு போர்வை வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நேற்று இரவு சென்னை நகரின் சாலை ஓரங்களில் படுத்தவர்களுக்கு போர்வை வழங்கினார். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பலருக்கும் அவராகவே போர்வையை போர்த்திச் சென்றார். இதுகுறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ‘‘நேற்று இரவு சென்னையில் சாலையில் நடந்து சென்றேன். சாலையின் ஒரத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், குளிரில் நடுங்கிக் கொண்டும், கொசுக்களோடு போராடிக் கொண்டும் இருந்தார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய முடிவு செய்தேன். அதனால் போர்வைகளை வாங்கி வந்து கொடுத்தேன்’’ என்றார்.