தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

வில்லன் நடிகர் இயக்கத்தில் ‘பிஎம்டபிள்யூ 1991’

‘பையா’, ‘கருங்காலி’, ‘வி3’ உள்பட பல படங்களில் வில்லனாக நடித்திருந்த பொன்முடி திருமலைசாமி இயக்கியுள்ள படம், ‘பிஎம்டபிள்யூ 1991’. கிரீன்விஸ் சினிமா சார்பில் வில்வங்கா தயாரித்துள்ளார். பொன்முடி திருமலைசாமி, ‘வட சென்னை’ படத்தில் தனுஷ் அம்மாவாக நடித்திருந்த மணிமேகலை, மதுரையை சேர்ந்த 9 வயது சிறுவன் கவுதம், சாப்ளின் பாலு நடித்துள்ளனர். அருண் டேவிட்...

‘பையா’, ‘கருங்காலி’, ‘வி3’ உள்பட பல படங்களில் வில்லனாக நடித்திருந்த பொன்முடி திருமலைசாமி இயக்கியுள்ள படம், ‘பிஎம்டபிள்யூ 1991’. கிரீன்விஸ் சினிமா சார்பில் வில்வங்கா தயாரித்துள்ளார். பொன்முடி திருமலைசாமி, ‘வட சென்னை’ படத்தில் தனுஷ் அம்மாவாக நடித்திருந்த மணிமேகலை, மதுரையை சேர்ந்த 9 வயது சிறுவன் கவுதம், சாப்ளின் பாலு நடித்துள்ளனர். அருண் டேவிட் ஒளிப்பதிவு செய்ய, மெக்என்ரோ ஜான் இசையில் தமிழ் ஆப்டன் பாடல்கள் எழுதியுள்ளார். படம் குறித்து பொன்முடி திருமலைசாமி கூறுகையில், ‘இதற்கு முன்பு நான் இயக்கிய ‘சோம பான ரூப சுந்தரம்’ படத்தில் விஷ்ணுப்பிரியன், ஐஸ்வர்யா தத்தா நடித்தனர்.

சில காரணங்களால் படத்தை மேற்கொண்டு உருவாக்க முடியவில்லை. அப்போது எனது அடுத்த படத்தை பற்றி ஐஸ்வர்யா தத்தா கேட்டபோது, ‘ஹீரோ, ஹீரோயின் இல்லாமல் ஒரு படத்தை உருவாக்குவேன்’ என்று சொன்னேன். அதைக்கேட்டு அவர் என்மீது கோபப்பட்டார். அவரிடம் நான் போட்ட சவாலுக்காகவே ‘பிஎம்டபிள்யூ 1991’ படத்தை இயக்கி நடித்திருக்கிறேன். பெயர்தான் பிஎம்டபிள்யூ. ஆனால், ஒரு சைக்கிள் பிரதானமாக நடித்துள்ளது. ‘பீச்சாங்கை’ படத்தில் பணியாற்றிய எனக்கு அங்கீகாரம் கிடைக்காததால் இயக்குனராகி விட்டேன்.

கவுதமுக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், 6 மாதங்கள் பேசவும், நடிக்கவும் பயிற்சி அளித்தேன். சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம் 22 விருதுகள் வென்றுள்ளது’ என்றார். தியேட்டர் ஆர்டிஸ்ட்டான அவர், மாணவர்களுக்கு நடிப்பு பயிற்சி அளித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த ‘ஜி’ படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்றுள்ளது.