படகு சவாரி கேட்கும் பூஜா ஹெக்டே
சூர்யா ஜோடியாக ‘ரெட்ரோ’ என்ற படத்தில் நடித்திருந்த பூஜா ஹெக்டே, ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்தில் ‘மோனிகா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘ஜன நாயகன்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா 4’ என்ற படத்தில் நடிக்கிறார். இதில் பங்கேற்க அடிக்கடி சென்னைக்கு வரும் அவர், சமீபத்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு மும்பைக்கு திரும்பினார்.
முன்னதாக சென்னையில் பெய்த கனமழையில் அவர் சிக்கி தவித்தார். சென்னை விமான நிலையம் செல்லும் வழியில் சாலையில் குறைந்தளவு மழை நீர் சூழ்ந்தது. அப்பகுதிகளை காரில் கடந்து சென்ற பூஜா ஹெக்டே, தனது காரின் பின்பகுதியில் இருந்தபடியே எடுத்த ஒரு வீடியோவை வெளியிட்டு, ‘விமான நிலையத்துக்கு ஒரு விரைவான படகு சவாரி வேண்டும்’ என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.