தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

சரீரம் விமர்சனம்...

தர்ஷனும், சாருமிஷாவும் தீவிரமாக காதலிக்கின்றனர். சாருமிஷா, தர்ஷனுடன் வீட்டை விட்டு ஓடுகிறார். தர்ஷனை கொல்ல சாருமிஷாவின் முறைமாமன் துடிக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. காதலுக்காக இதயத்தை மாற்றுவது, நாக்கை அறுப்பது என்று பல்வேறு கதைகள் வந்துள்ளன. அதில் மாறுபட்ட இந்த கதை, காதலுக்காக பாலினத்தை மாற்றிக்கொள்வது.

காதலிக்காக திருநம்பியாக மாறும் தர்ஷன், காதலனுக்காக திருநங்கையாக மாறும் ‘மாடன் கொடைவிழா’ சாருமிஷா இருவரும் கேரக்டருக்கு ஏற்ப இயல்பாகவும், சிறப்பாகவும் நடித்துள்ளனர். டாக்டராக ஷகீலா, போலீசாக ஜி.வி.பெருமாள், ஜெ.மனோஜ், ‘பாய்ஸ்’ ராஜன், மதுமிதா, ‘புதுப்பேட்டை’ சுரேஷ், கவுரி, லில்லி, மிலா ஆகியோரும் நன்கு நடித்துள்ளனர்.

திருநங்கைகளை கவுரவப்படுத்தும் கதைக்கு ஏற்ற ஒளிப்பதிவை கே.டோர்னலா பாஸ்கர், பரணிகுமார் வழங்கி இருக்கின்றனர். வி.டி.பாரதிராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓ.கே. இயக்குனரும், தயாரிப்பாளருமான ஜி.வி.பெருமாள் கவனத்தை ஈர்த்துள்ளார்.