தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

பாலிவுட் வாய்ப்புகளை மறுப்பது ஏன்: மாளவிகா மோகனன் பதில்?

சென்னை: மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடரில் நடித்து வரும் மாளவிகா மோகனன், தெலுங்கில் பிரபாஸுடன் ‘தி ராஜா சாப்’, தமிழில் கார்த்தியுடன் ‘சர்தார் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மோகன்லாலுடன் அவர் நடித்துள்ள ‘ஹிருதயபூர்வம்’ என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தியில் சில படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன், தற்போது இந்தி வாய்ப்புகளை தவிர்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில், நான் எதிர்பார்க்கும் வகையில் சிறந்த கதைகள் கிடைக்கின்றன. கேரக்டர்களும் வித்தியாசமாக இருப்பதால், அந்தந்த மொழி படங்களை விரும்பி ஏற்று நடிக்கிறேன். இந்த காரணத்துக்காகவே இந்தி படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறேன். சமீபத்தில் எனக்கு பாலிவுட்டில் இருந்து நிறைய அழைப்புகள் வந்தன.

எதுவும் என்னை உற்சாகப்படுத்தும் விதமாக, வித்தியாசமான கேரக்டராக அமையவில்லை. எனவே, எல்லா வாய்ப்புகளையும் மறுத்துவிட்டேன். ஸ்கிரிப்ட் உற்சாகப்படுத்தினால் மட்டுமே புதுப்பட வாய்ப்புகளை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு படத்தில் நடிப்பதற்காக 5 மாதங்களை முழுமையாக செலவழிக்கிறேன் என்றால், அந்த கதையோ அல்லது என் கேரக்டரோ முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்றார்.