பாலிவுட்டில் நடிக்க சிட்னி ஸ்வீனிக்கு ரூ.530 கோடி சம்பளமா?
மும்பை: ஹாலிவுட்டில் பிரபல நடிகையாக அறியப்படுவர் சிட்னி ஸ்வீனி. இந்தியாவில் பாலிவுட்டில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு படத்தில் சிட்னி ஸ்வீனியை நடிக்க வைக்க அப்படக்குழு முயற்சித்து வருவதாகவும் இதற்காக 45 மில்லியன் பவுண்டு, இந்திய ரூபாய் மதிப்பின்படி 530 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தில் ஒரு இந்திய பிரபலத்தை காதலிக்கும் இளம் அமெரிக்க நட்சத்திரமாக ஒரு கதாபாத்திரம் இருப்பதாகவும் அதில்தான் சிட்னி ஸ்வீனியை நடிக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நியூ-யார்க், பாரிஸ், லண்டன் மற்றும் துபாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.