பம்பாய் 30 ஆண்டுகள் நிறைவு கேரளாவில் கொண்டாட்டம்
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1995ல் திரைக்கு வந்து வெற்றிபெற்ற படம், ‘பம்பாய்’. இதில் அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா நடித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தார். இப்படம் திரைக்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதை கொண்டாடும் விதமாக, கேரளாவை சேர்ந்த பேக்கல் ரிசார்ட் வளர்ச்சி கழகம், பிரமாண்டமான விழாவுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இதில் மணிரத்னம், அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா கலந்துகொள்கின்றனர்.
