தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

பாய் விமர்சனம்...

தமிழகத்தில் பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்ற ஒரு குழுவின் மூளையாக செயல்படுகிறார் ஹீரோ ஆதவா ஈஸ்வரா. அவரது மனைவி ஊரில் இருந்து வீட்டுக்கு வருவதாக போன் செய்கிறார். தனது ரகசியங்கள் மனைவிக்கு தெரிய கூடாது, என்பதால் அவருக்கு முன்னதாக வீட்டுக்கு செல்கிறார். அங்கு, ஒரு ஆணும், பெண்னும் உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பிறகு என்ன நடந்தது ? அந்த ஆணும், பெண்னும் யார் ? மனைவி எங்கே? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலை சொல்வது தான் ‘பாய்’.

நாயகன் ஆதவா ஈஸ்வரா, ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்பு, என்று ஆக்‌ஷன் ஹீரோவுக்கான தகுதியோடு இருந்தாலும் அதை சரியான முறையில் பயன்படுத்தவில்லையே என தோன்றுகிறது. வில்லனாக வரும் வயதான நடிகர், வீட்டில் இருக்கும் ஒரு ஜோடி, நாயகனின் மனைவி உள்ளிட்ட பரிட்சயம் இல்லாத நடிகர்களை விட நாயகன் ஆதவா ஈஸ்வரா திரையை ஆக்கிரமித்து கொள்கிறார்.

இசையமைப்பாளர் ஜித்தின் கே.ரோஷனின் பின்னணி இசை அளவாக பயணளித்துள்ளது. ஒளிப்பதிவாளர் கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும், ஒரே அறையில் நடக்கும் சம்பவங்களையும், ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் நேர்த்தியாக உள்ளது. எழுதி இயக்கியிருக்கும் கமலநாதன் புவன்குமார், ஸ்லீப்பர்செல்கள் யார் ? அவர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட தகவல்களை சொல்ல முயற்சித்திருக்கும் விதம் அருமை. மொத்தத்தில், இந்த ‘பாய்’ ஆக்‌ஷன் திரில்லர் ரசிகர்களுக்கு பிடிக்கும்.