தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

யோகி பாபுவுக்கு பரிசளித்த பிரம்மானந்தம்

  தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்திலும், கதையின் நாயகனாகவும் நடித்து வரும் யோகி பாபு, தற்போது ‘குர்ரம் பாப்பி ரெட்டி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். முரளி மனோகர் ரெட்டி இயக்கும் இதில், தெலுங்கு முன்னணி நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழ் படவுலகின் இரு...

 

தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்திலும், கதையின் நாயகனாகவும் நடித்து வரும் யோகி பாபு, தற்போது ‘குர்ரம் பாப்பி ரெட்டி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். முரளி மனோகர் ரெட்டி இயக்கும் இதில், தெலுங்கு முன்னணி நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழ் படவுலகின் இரு நகைச்சுவை நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்துள்ளதால், இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடந்தபோது பிரம்மானந்தம், யோகி பாபு இடையே நட்பு மலர்ந்தது.

உடனே பிரம்மானந்தம் தனது வீட்டுக்கு யோகி பாபுவை வரவழைத்து, அவருடன் அதிக நேரத்தை செலவழித்து மனம் திறந்து பேசினார். அப்போது தனது வாழ்க்கை அனுபவங்களை பற்றி பதிவு செய்துள்ள ‘நான் பிரம்மானந்தம்’ என்ற புத்தகத்தை யோகி பாபுவுக்கு வழங்கினார். இதுபற்றி யோகி பாபு கூறுகையில், ‘தெலுங்கு படவுலகம் என்னை அன்புடன் வரவேற்று ஆதரவு கொடுத்தது. இது எனக்கு அதிக மகிழ்ச்சியை அளித்துள்ளது. பிரம்மானந்தம் சார் போன்ற லெஜண்டுடன் இணைவதை நினைத்து பெருமைப்படுகிறேன்’ என்றார்.