தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

தடைகளை உடைக்கும்; அனுபமாவின் ‘பர்தா’

  மகளிருக்கான சக்தியை கொண்டாடும் வகையில் அனுபமா பரமேஸ்வரன், தர்ஷனா ராஜேந்திரன், சங்கீதா கிரிஷ் நடிக்கும் ‘பர்தா’ என்ற படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இது திரில், பாரம்பரியம், போராட்டங்கள் ஆகிய உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ளது. வரும் 22ம் தேதி தெலுங்கு மற்றும் மலையாளத்தில் திரைக்கு வரும் இப்படம், பழைய மரபுகள் மற்றும் கட்டுப்பாடுகளில் இருந்து பெண்கள்...

 

மகளிருக்கான சக்தியை கொண்டாடும் வகையில் அனுபமா பரமேஸ்வரன், தர்ஷனா ராஜேந்திரன், சங்கீதா கிரிஷ் நடிக்கும் ‘பர்தா’ என்ற படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இது திரில், பாரம்பரியம், போராட்டங்கள் ஆகிய உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ளது. வரும் 22ம் தேதி தெலுங்கு மற்றும் மலையாளத்தில் திரைக்கு வரும் இப்படம், பழைய மரபுகள் மற்றும் கட்டுப்பாடுகளில் இருந்து பெண்கள் தங்கள் சுதந்திரத்தை எப்படி காப்பாற்றினர் என்பதை சொல்கிறது. கலாச்சாரத்தை பாதுகாக்கவும், தனி மனித உணர்வுகளுக்கும் இடையிலான விவாதத்தையும் படம் எடுத்துரைக்கிறது. ‘சினிமா பண்டி’, ‘சுபம்’ படங்களை இயக்கிய பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கியுள்ளார்.

சுப்பு என்ற கேரக்டரில் நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன், கிராமத்தில் தனது முகத்தை பர்தாவுக்குள் மறைத்து வைக்க வேண்டும் என்ற பாரம்பரியத்துக்கு கட்டாயப்படுத்தப்படுகிறார். நகரத்தை சேர்ந்த தர்ஷனா ராஜேந்திரன், சங்கீதா கிரிஷ் ஆகியோரை சந்திக்கும்போது அவருடைய விதிகள் மாறுகிறது. சுப்புவின் வாழ்க்கையை சுற்றியுள்ள பாரம்பரிய சுவர்களை உடைக்க அவர்கள் உதவுகின்றனர். இப்படத்தை ஆனந்த் மீடியாவுக்காக விஜய் டோங்கடா, னிவாசுலு பி.வி, தர் மக்குவா இணைந்து தயாரித்துள்ளனர். முக்கிய வேடத்தில் ராக் மயூர் நடித்திருக்கிறார். மிருதுல் சுஜித் சென் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார்.