1980களில் பிரபலமான நடிகர், நடிகைகள் ரீ-யூனியன்
சென்னை: கடந்த 1980 மற்றும் 1990களில் திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகர், நடிகைகள் சென்னையில் சந்தித்து உரையாடிய நிகழ்ச்சி நடந்தது. ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா தம்பதி வீட்டில் நடந்த இந்நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய திரைத்துறைகளை சேர்ந்த 31 நடிகர், நடிகைகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியை லிஸி லட்சுமி, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு சுந்தர், சுஹாசினி மணிரத்னம் ஒருங்கிணைத்தனர். இந்த ரீ-யூனியன் நிகழ்ச்சியில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், ஜாக்கி ஷெராஃப், சரத்குமார், ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா, நதியா, ராதா, சுஹாசினி மணிரத்னம், ரம்யா கிருஷ்ணன், ஜெயசுதா, சுமலதா, ரஹ்மான், குஷ்பு, கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், லிஸி லட்சுமி, நரேஷ், சுரேஷ், ஷோபனா, மேனகா, ரேவதி, பிரபு, ஜெயராம், அஸ்வதி ஜெயராம், சரிதா, பானுசந்தர், மீனா, லதா, ஸ்வப்னா, ஜெயஸ்ரீ ஆகியோர் கலந்துகொண்டு உரையாடினர்.