தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

செல்போன் அதிகம் பயன்படுத்தும் ஸ்ருதிஹாசன்

சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘கூலி’ படத்தில் பிரீத்தி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘டிரெயின்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார் 2’ படத்தில் நடிக்கவுள்ளார்....

சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘கூலி’ படத்தில் பிரீத்தி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘டிரெயின்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார் 2’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த ஒரு செல்போன் அறிமுக நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், ‘‘எல்லோரையும் போல நானும் செல்போனை ரொம்ப அதிகமாக பயன்படுத்துகிறேன். எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் செல்போனை பயன்படுத்துவதை நிறுத்துவதில்லை. அதை பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை. செல்போனை பயன்படுத்துவதால் மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல சில நேரங்களில் அவுட்டோர் ஷூட்டிங் செல்லும்போது சிக்னல் கிடைக்கவில்லை என்றால் ரொம்ப வெறுப்பாக இருக்கும். அதை ஒன்றும் செய்யமுடியாது’’ என்று பேசியுள்ளார்.