தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கவர்ச்சியில் எல்லை மீறிய சைத்ரா

கடந்த 2019ல் வெளியான ‘மஹிரா’ என்ற கன்னட படத்தில் அறிமுகமானவர், சைத்ரா ஜே.ஆச்சர். கன்னடத்தில் சொந்தக்குரலிலும் பாடியிருக்கிறார். தொடர்ந்து சில படங்களில் நடித்தார். கணேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் நடிப்பில் வெளியான ‘3 பிஹெச்கே’ என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதில் குடும்பப்பாங்காக நடித்த அவர், தனது கேரக்டரின்...

கடந்த 2019ல் வெளியான ‘மஹிரா’ என்ற கன்னட படத்தில் அறிமுகமானவர், சைத்ரா ஜே.ஆச்சர். கன்னடத்தில் சொந்தக்குரலிலும் பாடியிருக்கிறார். தொடர்ந்து சில படங்களில் நடித்தார். கணேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் நடிப்பில் வெளியான ‘3 பிஹெச்கே’ என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதில் குடும்பப்பாங்காக நடித்த அவர், தனது கேரக்டரின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். பெங்களூருவை சேர்ந்த அவர், தற்போது கன்னடத்தில் அதிக கவனம் செலுத்துகிறார். ‘3 பிஹெச்கே’ படம் ெவற்றிபெற்றாலும், தமிழில் அவருக்கு புதுப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனவே, வாய்ப்பு வேட்டை நடத்துவதற்காக நாள்தோறும் கவர்ச்சி போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் நீச்சல் உடையணிந்து கிளாமராக போஸ் கொடுத்த போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள், பட வாய்ப்புக்காக கவர்ச்சியில் அவர் எல்லை மீறிவிட்டதாக கமென்ட் வெளியிட்டுள்ளனர்.