குணச்சித்திர நடிகர் ஹீரோ ஆனார்
சென்னை: செவன்ராஜ் ஆர்ட்ஸ் சார்பில் நடிகரும், பெங்களூரு தொழிலதிபருமான ரெட் அண்ட் ஒயிட் செவன்ராஜ் தயாரிக்க, சசிகுமார்.எஸ் எழுதி இயக்கியுள்ள படம், ‘குப்பன்’. கதையின் நாயகனாக ‘ஜெய் பீம்’ குணச்சித்திர நடிகர் மொசக்குட்டி, அவரது மகளாக ஆதித்யா வினோத் நடித்துள்ளனர். மற்றும் சிபு சரவணன், ஆதித்யா வினோத், செவன்ராஜ் நடித்துள்ளனர். கிரண் கஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்....
படம் குறித்து சசிகுமார்.எஸ் கூறியதாவது:
செவன்ராஜ் கன்னட படங்களில் நடிப்பது மட்டுமின்றி, 4 கன்னட படங்களையும், ஒரு மலையாள படத்தையும் தயாரித்துள்ளார். கன்னட படத்தின் சிறந்த திரைக்கதைக்காக விருது பெற்றுள்ள நான், ‘குப்பன்’ படத்தை எழுதி இயக்கியுள்ளேன். கதைக்கு ‘ஜெய் பீம்’ மொசக்குட்டி பொருத்ததமாக இருந்ததால், அவரையே ஹீரோவாக்கினோம்.