தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

சார்மி படத்தில் இணைந்த ஹர்ஷவர்தன்

புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சம்யுக்தா மேனன், தபு, விஜயகுமார், பிரம்மாஜி, விடிவி கணேஷ் நடிக்கும் படத்தை புரி கனெக்ட்ஸ், ஜே.பி மோஷன் பிக்சர்ஸ் சார்பில் புரி ஜெகன்நாத், நடிகை சார்மி கவுர், ஜே.பி.நாராயண ராவ் இணைந்து தயாரிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில், தேசிய விருது பெற்ற இசை இமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இணைந்துள்ளார்.

‘அர்ஜூன் ரெட்டி’, ‘கபீர் சிங்’, ‘அனிமல்’ உள்பட பல படங்களில் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்து பிரபலமான அவர், எமோஷன் கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகும் இதற்கு இசை அமைக்க சம்மதித்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் படம் திரைக்கு வருகிறது.