தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

சென்னையில் சிகிச்சை முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு திரும்புகிறார் மம்மூட்டி

திருவனந்தபுரம்: திடீர் உடல்நலக்குறைவால் கடந்த 7 மாதங்களாக சென்னையில் சிகிச்சையில் இருந்து வந்த பிரபல நடிகர் மம்மூட்டி உடல்நலம் தேறியதை தொடர்ந்து விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மலையாள சினிமாவில் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் மம்மூட்டி, டைரக்டர் மகேஷ் நாராயணனின் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்....

திருவனந்தபுரம்: திடீர் உடல்நலக்குறைவால் கடந்த 7 மாதங்களாக சென்னையில் சிகிச்சையில் இருந்து வந்த பிரபல நடிகர் மம்மூட்டி உடல்நலம் தேறியதை தொடர்ந்து விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மலையாள சினிமாவில் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் மம்மூட்டி, டைரக்டர் மகேஷ் நாராயணனின் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்தப் படத்தில் மோகன்லால், பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் உள்பட மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்நிலையில் நடிகர் மம்மூட்டிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

சிகிச்சைக்கு பின்னர் அவர் சென்னையில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இதனால் கடந்த 7 மாதங்களாக மம்மூட்டி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் இவர் நடித்து வந்த படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மம்மூட்டி உடல்நலம் தேறி வருவதாகவும், அவர் விரைவில் சென்னையில் இருந்து கேரளாவுக்கு வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.